TOP NEWS
Print

விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம் - 2017

on . Posted in General

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ”விளையாட்டு மற்றும் உடல்நல தேசிய வாரம்” 2017.02.06 ஆம் திகதி முதல் 2017.02.12 ஆம் திகதிவரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அலுவலர்கள் உடல்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம், இலங்கையில் அதிவேகமாகப் பரவுகின்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறப்பான ஆரம்பம் ஒன்றை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.

அந்தவகையில் 2017.02.06 ஆம் திகதி ”விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல மேம்பாட்டு அரச, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள் தினம்” எனப் பெயாிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வட மாகாணக் கல்வித் திணைக்கள மற்றும் வலிகாமம் கல்வி வலய அலுவலர்கள் இணைந்து 2017.02.06 ஆம் திகதி மேற்படி தினத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அலுவலர்களுக்கான உடற்பயிற்சிக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மாகாணக் கல்வித் திணைக்கள விளையாட்டுத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான ஆசிரிய வளவாளர்கள் வழங்கினர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, யாழ் போதனா வைத்தியசாலையில் விளையாட்டுத்துறை வைத்திய அதிகாரி Dr.அறிவுச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு நாம் சுகமாக வாழ்வதற்கு உடற்பயிற்சியின் அத்தியாவசியம் தொடர்பாக விசேட உரையாற்றினார்.