TOP NEWS
Print

முழு நிலாக் கலை விழா - முழு நிலா முத்து - 2017

on . Posted in General

வட மாகாணக் கல்வித் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் மாதந்தோறும் நடாத்திவருகின்ற முழுநிலாக் கலை விழாக்களின் வரிசையில் 2017 ஆம் ஆண்டின் முழு நிலாக் கலை விழாக்களின் ஆரம்ப விழாவாக பன்னிரண்டு வலயங்களையும் இணைத்து மாகாணக் கல்வித் திணைக்களத்தால் முல்லைத்தீவுக் கல்வி வலயத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ அ.சி.து.ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச்சிறப்பித்தனர்.